பிரித்தானியாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய தீவிபத்து

0

பிரித்தானியாவில் கென்டில் உள்ள Sevenoaks அருகில் சரக்கு ரயில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 5.15 மணிக்கு டன்டன் கிரீன் ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் ஒன்று தீ பற்றி எரிவதாக கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவயிடத்திற்கு விரைந்த வீரர்கள் 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி 7.45 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுமாறு தீயணைப்பு துறை வலியுறுத்தியுள்ளது.

தீ விபத்து காரணமாக அப்பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதால் Orpington, Sevenoaks அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி வரை அப்பாதையில் ரயில் சேவை செயற்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயிலுக்கு பதிலாக பேருந்து சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீப்பிடித்தமைக்கான காரணம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here