பிரித்தானியாவில் மேலும் ஒரு புதுவகை வைரஸ்… அச்சத்தில் மருத்துவர்கள்..!

0

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு எபோலா போன்ற வைரஸால் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவுக்கு சென்று திரும்பிய குடும்பம் ஒன்றுக்கு இவ்வாறான எபோலா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

இதில் இருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது நபர் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறித்த எபோலா தொற்றால் உள்ளுறுப்பில் இரத்தக்கசிவு ஏற்படலாம் எனவும் உள்ளுறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக எலி சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபட்ட பழங்கள் அல்லது உணவுப்பொருட்களால் மக்கள் பாதிப்புக்கு இலக்காவதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள் மூலமாகவும் பரவுகிறது.

பல மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இந்த தொற்றின் தாக்கம் பல மடங்கு குறைந்துள்ளதுடன், ஆபத்தானது அல்ல எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் விரைவில் குணமடைந்துவிடுவர்.

சிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1980களில் பிரித்தானியாவில் 8 பேர்களுக்கு எபோலா தொற்று கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் 2009ல் இருவருக்கு மட்டும் எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here