பிரித்தானியாவில் மூளைச்சாவடைந்த இளைஞன் மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்…

0

பிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த Lewis Roberts (18), இம்மாதம் 13ஆம் திகதி, வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.

தலையில் அடிபட்ட Lewisஐ ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளாக தெரிவித்துள்ளார்கள்.

நான்கு நாட்களுக்குப் பின் குடும்பத்தார் Lewisக்கு விடைகொடுக்கலாம் என்றும், அவரது செயற்கை சுவாசத்தை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணீர் விட்டுக் கதறிய குடும்பம், கடைசியாக, Lewisஇன் உடல் உறுப்புகளை ஏழு பேருக்கு தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றுவதற்காக, கொஞ்ச நேரம் கூட அவரது செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் Lewisஇன் அக்காவான Jade Roberts (28), தம்பியுடைய அறையில் அமர்ந்து, அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.

Lewis, நீ தயாராக இருக்கிறாயா, நான் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன்.

நீ சுவாசிக்கவேண்டும் சரியா, என்று கேட்டுவிட்டு, ஒன்று, இரண்டு, மூன்று சுவாசி Lewis என்று சொல்ல, சினிமாவில் வருவதுபோல் சட்டென சுவாசித்திருக்கிறார்.

சுவாசிக்க ஆரம்பித்துள்ள Lewis, பின்னர், அனைவரும் ஆச்சரியப்படத்தக்க விதமாக கண்களை சிமிட்டத் தொடங்கியுள்ளார்.

தற்போது Lewis கை கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும் கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.

மேலும் மருத்துவர்கள் Lewis க்கு சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here