பிரித்தானியாவில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் பூச்சியமாக பதிவு

0

பிரித்தானியாவில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் பூச்சியத்தில் பதிவாகியுள்ளது.

நாளாந்த உயிரிழப்புகள் குறித்த அறிக்கைகளின் தரவுகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும், வாரத்தின் தொடக்கத்திலும் குறைவாகவே இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை நிகழும் மரணங்கள் அடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார செயலாளர் மட் ஹான்காக் கருத்து தெரிவிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவார்கள் என கூறியுள்ளார்.

தடுப்பூசிகள் மிக விரைவாக செயல்படுகின்றன.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸை வெற்றிகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here