பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்றாளர்கள் எண்ணிக்கை….

0
Doctors receive instructions for a respirator system at the intensive care unit of the University Medical Center Hamburg-Eppendorf in Hamburg, Germany, March 25, 2020, as the spread of the coronavirus disease (COVID-19) continues. Axel Heimken/Pool via REUTERS

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 36,389 புதிய தொற்றாளர்கள் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளமை சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்று ஒரே நாளில் 64 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இது முந்தைய வாரத்திலிருந்து 45% அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன.

75 பேரில் ஒருவருக்கு இப்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஸ்காட்லாந்தில் 80 பேரில் ஒருவருக்கும், வடக்கு அயர்லாந்தில் 170 பேரில் ஒருவருக்கும் மற்றும் வேல்ஸில் 210 பேரில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நேற்று 43,000 பேர் முதல் கோவிட் தடுப்பூசியும், 174,742-க்கும் அதிகமானோர் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here