பிரித்தானியாவில் மீண்டும் போராட்டம்! மேலும் 14 பேர் கைது

0

பிரித்தானியாவில் கடந்த ஒரு வருடமாக கடுமையான தேசிய ஊரடங்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை சுமார் 200க்கும் மேப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரத்தின் மையப்பகுதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ‘Kill the Bill’, ‘Shame on You’ என அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும், ஆர்பாட்டக்கார்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை முகக்கவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 பேருக்கு மேல் வீட்டிற்கு வெளியே யாரும் ஒன்று கூட அனுமதி இல்லாத நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் வன்முறை கையாளப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here