பிரித்தானியாவில் பொதுமுடக்கம் விலக்கப்படுமா…? மக்கள் அதிர்ச்சி

0
Passengers wait in line at the Eurostar terminal at St Pancras International, amidst the spread of the coronavirus disease (COVID-19) pandemic, in London, Britain, December 23, 2020. REUTERS/Hannah McKay

பிரித்தானியாவில் இம்மாதம் ஜூன் 21ஆம் திகதி விலக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 19 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமுடக்க விலக்கல் மேலும் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் நாளொன்றிற்கு 844,285 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில், இந்த திங்கட்கிழமை அதில் பாதிபேருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை.

வெறும் 368,555 பேருக்கு மட்டுமே அன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தடுப்பூசி தட்டுப்பாடு.

குறிப்பாக, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் பிரச்சினைகள் ஏற்படுவது தெரியவந்ததையடுத்து,

40 வயதுக்கு கீழ் உள்ள அனைவருக்குமே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு பதிலாக பைசர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகளை வழங்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பைசர் மற்றும் மொடெர்னா நிறுவன தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது என்பதை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பிரச்சினை என்னவென்றால், ஏற்கனவே பொதுமுடக்க விலக்கல் தாமதம் ஏற்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆகவே, மீண்டும் பொதுமுடக்க விலக்கல் மேலும் தள்ளிப்போகலாம் என அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here