பிரித்தானியாவில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

0

பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது வரை இந்த வைரஸால் 10,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதற்கு முன் தடுப்பூசி போடும் படி பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

எதிர்வரும், திங்கட்கிழமை முதல் 12 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

குழந்தைகளை பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.

இதன் காரணமாகத் தான் அவர்கள் பள்ளிக்கு திரும்புவதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இன்று மட்டும் பிற்பகல் வரை, கொரோனாவால் புதிதாக 78,610 பேர் பாதிகாப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் திகதி 68,053 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டிருந்ததே, அதிகபட்ச பதிவாக இருந்தது.

தற்போது அதை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here