பிரித்தானியாவில் புதிய மாறுபாடடைந்த கொரோனா..! நிபுணர்கள் எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் இந்திய மாறுபாடு காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.

இந்நிலையில், புதிதாக தாய்லாந்து மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுக்க இதுவரை 100கும் அதிகமானோருக்கு தாய்லாந்து மாறுபாடு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு திரும்பிய பயணிகளால் முதன் முதலில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது.

பிரித்தானியாவில் மே 24 முதல் தாய்லாந்து மாறுபாடு தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரையான விசாரணையில், தாய்லாந்து மாறுபாடு காரணமாக தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தற்போதுள்ள தடுப்பூசிகளே தாய்லாந்து மாறுபாட்டிற்கும் போதுமானது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தாய்லாந்தை பொறுத்தமட்டில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் ஒன்றாகும்.

இதுவரை தாய்லாந்தில் 873 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

மேலும் மே 17ம் திகதி அங்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருந்தாலும், அதில் அதிகமும் சிறைவாசிகள் என தெரிய வந்துள்ளது.

திங்கள்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கை 9,635ல் 6,853 பேர்கள் சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here