பிரித்தானியாவில் புதிய கோவிட் வைரஸ்….! பாதிக்கப்பட்டுள்ள மக்கள்…

0

பிரித்தானியாவில் ஜூலை 21 ஆம் திகதி பிறழ்ந்த திரிபு ‘B.1.621’ என அறியப்படும் புதிய தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸால் இதுவரை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகை வைரஸ் ஏற்கெனவே சர்வதேச அளவில் பரவியுள்ளாதால் கவலை அளிப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த புதிய கோவிட் -19 மாறுபாட்டை கண்காணித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் ‘தற்போது சமூக அளவில் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று பொது சுகாதார இங்கிலாந்து (PHE) வலியுறுத்தியுள்ளது.

‘இந்த வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது அல்லது தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் செயல்திறனை எதிர்த்து போராடுவதாகவோ எந்த ஆதாரமும் இல்லை’ என கூறுகிறார்கள்.

இதன் தன்மையை நன்கு புரிந்துகொள்வதற்கான கூடுதல் சோதனைகள் நடந்து வருகின்றன.

மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் தொடர்புகள் சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்படுகின்றன.

பல நாடுகளில் இந்த ‘B.1.621’ வைரஸ் பரவலாக பரவியுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்துள்ளதால், இதனை ‘அக்கறையின் மாறுபாடுகள்’ (variations of concern) என்ற பட்டியலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here