பிரித்தானியாவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய ஆயிரக்கணக்கான மாணவிகள்…..

0

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அமெரிக்கரான Soma Sara (22), பிரித்தானிய பள்ளியில் கல்வி கற்கின்றார்.

Sara பாதி சீனர் என்பதால் பல பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் Sara கொரோனா ஊரடங்கின்போது அவரது தோழிகள் பலர், சக மாணவர்களால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, இதேபோல் பாதிக்கப்பட்டவர்களுக்காக Everyone’s Invited என்ற இணையதளத்தைத் தொடங்கி, தாங்கள் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஒரே வாரத்தில் 300 பேர் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை அந்த தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை தெரிய வந்துள்ளது.

11 வயதேயான மாணவிகள் கூட, நிர்வாண படங்களைப் பகிர கட்டாயப்படுத்தப்பட்டதுடன் முதல், பார்ட்டிகளில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு துஷ்பிராயோகம் செய்யப்பட்டமை வெளிவந்துள்ளது.

இன்று வரை, 8,000 மாணவிகளிடமிருந்து பாலியல் புகார்கள் வந்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தங்கள் மகன் அல்லது மகள் இதுபோல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக தெரியவந்தால், புகாரளிக்க முன்வருமாறு பொலிசார் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here