பிரித்தானிய தேம்ஸ் நதி தீவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹம்ப்டனில் உள்ள பிளாட்ஸ் ஐயோட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இருந்து வெடிப்பு சத்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சில உள்ளூர்வாசிகள் தீவில் மூழ்கிய படகுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்த குழுவினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் தீயணைப்பு படையினர் தீயில் ‘சிலிண்டர்கள்’ வெடித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடங்கள் கூறியுள்ளன.