பிரித்தானியாவில் பல மில்லியன் செலவிட்டு தனி விமானத்தில் நாடு கடத்தப்பட்ட நபர்

0

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஒருவருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்ததுடன், பொதுமக்கள் வரிப்பணத்தில் பல மில்லியன் செலவிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறித்த ஒரே ஒரு நபருக்காக 14 ஊழியர்களுடன் 218 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆபரேஷன் எஸ்பார்டோ என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் இந்த நாடுகடத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆபரேஷன் எஸ்பார்டோ திட்டத்திற்காக மொத்தம் 17.1 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரித்தானியாவில் இருந்து வெளிநாட்டு குற்றவாளிகள், சட்டவிரோத குடியேறிகள் மற்றும் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி 5கும் குறைவான நபர்களை வெளியேற்ற 2020ல் 6 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் அரசு தரப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. அல்பேனியாவுக்கு அனுப்பப்பட்ட விமானத்தில் 121 ஊழியர்களுடன் 34 பேர்கள் வெளியேற்றப்பட்டதே மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

267 பயணிகளுக்கான விமானம் ஒன்றில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு வெறும் மூவரை மட்டுமே அனுப்பியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் குற்றவாளிகள் மற்றும் புகலிடக்கோரிக்கைகள் மறுக்கப்பட்டவர்களை வெளியேற்ற செலவிடப்பட்டுள்ள இந்த தொகையானது வீண் என நாடாளுமன்ற உறுப்பினர் David Jones கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த தகவல் வரி செலுத்தும் பிரித்தானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உணமை என John O’Connell தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here