பிரித்தானியாவில் பரவும் லஸ்ஸா காய்ச்சல்! பச்சிளம் குழந்தை பலி…!

0

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை.

இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் லுடன் அன் டன்ஸ்டபிள் மருத்துவமனையில் உயிரிழந்தது.

இந்த நோய்த் தொற்றானது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகமையான ‘உக்சா’ (UKHSA) லஸ்ஸா காய்ச்சல் மரணம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த மூவருக்கும் ஏற்பட்ட தொற்று மேற்கு ஆப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தோடு தொடர்புடையது என்று உக்சா முதன்மை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்கு மேலான காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இந்த லஸ்ஸா காய்ச்சல் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.

லஸ்ஸா காய்ச்சல் ஏற்பட்ட பெரும்பாலோர் குணமடைந்துவிடுவார்கள்.

சிலருக்கு நோய் தீவிரமடையும் அபாயம் உள்ளது.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இப்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 3 தொற்றுகளுக்கு முன்பாக, பிரிட்டனில், 1980 முதல் 8 பேருக்கு மட்டுமே இந்த காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

கடைசியாக இருவருக்கு 2009ல் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் கலந்த உணவு அல்லது வீட்டு உபயோகப் பொருள்களுடன் ஏற்படும் தொடர்பு வாயிலாகவே இந்த தொற்று பொதுவில் பரவ கூடியது.

எபோலா போல லஸ்ஸா காய்ச்சலும், நோயுற்ற நபர்களின் இரத்தம், எச்சில், சிறுநீர், விந்து போன்ற உடல் திரவங்கள் வழியாகவே பரவும்.

நோய்த் தொற்றிய எலிகளின் சிறுநீர், மலம் ஆகியவற்றோடு ஏற்படும் தொடர்பு மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவும்.

இந்த நோய்த் தொற்றினால், காய்ச்சலும், ஃப்ளூ போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.

அத்துடன் மூக்கு, வாய் உள்ளிட்ட உடல் பாகங்களில் இரத்தம் கசியவும் இந்த நோய் காரணமாக இருக்கும்.

இந்த நோய்த் தொற்று ஏற்பட்ட பெரும்பாலோர் மீண்டுவிடுவார்கள். ஆனால், சிலருக்கு மரணமும் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரசின் உறவுக்கார வைரஸ் என்று கூறப்படும் லஸ்ஸா காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here