பிரித்தானியாவில் பசு மாட்டுக்கு பூஜை செய்த ரிஷி சுனக்

0

பிரித்தானியாவுக்கான பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் ரிஷி சுனக் பசு மாட்டிற்கு பூஜை செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள பக்தி வேதாந்த மனோர் கோயிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த பசு மாட்டுக்கு அவர் பூஜைகள் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் இருந்த இந்தியர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரையின் கடைசி நாட்கள் மிகக் கடினமானதாக இருந்ததாக அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு பூஜையில் ரிஷி சுனக்கின் மனைவியும் , இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தியின் மகளுமான அக்‌ஷதாவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here