பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்

0
Mourners attend the funeral in Chislehurst of Ismail Mohamed Abdulwahab, 13, from Brixton, south London, who died alone in King’s College Hospital in the early hours of Monday after testing positive for the coronavirus. PA Photo. Picture date: Friday April 3, 2020. The teenager was buried in the Eternal Gardens at Kemnal Park Cemetery in Chislehurst without his family present as his mother and six siblings are forced to self-isolate. See PA story HEALTH Coronavirus Ismail. Photo credit should read: Aaron Chown/PA Wire

பிரித்தானியாவில் எதிர்வரும் மே 17 ஆம் திகதி முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

புதிய திட்டங்களின் படி நடைபெறும் இறுதிச் சடங்குகளில் குடும்பங்களும் நண்பர்களும் வரம்பற்ற எண்ணிக்கையில் மறைந்த உறவினருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியும்.

தற்போது பிரித்தானியாவில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளின் படி, இறுதி சடங்குகளில் 30 பேர் வரை மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பிரித்தானியா அரசானது ஜூன் மாதம் கட்டுப்பாட்டை தளர்த்த திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது நாட்டில் தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டமிட்டதை விட ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, 30 நபர்கள் மட்டுமே இறுதி சடங்கில் கலந்துக்கொள் அனுமதி என்ற கட்டுப்பாட்டை நீக்க உத்தரவிட்டுள்ளது.

இறுதி சடங்கு நடக்கும் இடத்தில் பாதுகாப்பாக எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமோ, அத்தனை பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

பிரித்தானியாவில் தற்போது திருமணங்களில் 15 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 17ம் திகதி முதல் 30 பேர் வரை கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஜூன் மாதம் முதல் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here