பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு! பொலிசாரின் அதிரடி

0

பிரித்தானியாவின் Hartcliffe-ல் இருக்கும் Hareclive சாலை பகுதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவ்விடத்திற்கு விரைந்த பொலிசார், அங்கிருந்த ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

அதன் பின் விசாரணையில், சம்பவ இடத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 5.20 மணியளவில் Bristol-ன் Hareclive சாலை பகுதிக்கு சிறப்பு துப்பாக்கி அதிகாரிகள் அழைக்கப்படனர்.

இங்கு ஒரு ஆண் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பின்னர் பல நபர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வந்தது.

உடனடியாக காயமடைந்து கிடந்த இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here