பிரித்தானியாவில் பர்மிங்காமில் குவாரி ஒன்றின் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த பெண் ஒருவரை பொலிசார் பிடித்து விசாரித்தனர்.
Gareeca Gordon 28 வயது என்ற அந்த பெண்ணிடம் இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன.
அவற்றை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்த பொலிசார் அவற்றைத் திறந்தபோது, கொல்லப்பட்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் அதற்குள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விசாரணையில், கொல்லப்பட்ட இளம்பெண், பெண்கள் விடுதி ஒன்றில் Gareecaவுடன் தங்கியிருந்த Phoenix Netts (28) என்பது தெரியவந்தது.
நீண்ட நாட்களாக Phoenixஐ கொலை செய்ததை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்துவந்த Gareeca, தற்போது அவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
Gareeca, Phoenixஐ பல நாட்களாக ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார்.
அவர் மறுக்கவே, ஒரு நாள் அவரை கத்தியால் குத்திக் கொன்று ஆறு துண்டுகளாக்கி சூட்கேஸ் ஒன்றில் அடைத்து குவாரி ஒன்றின் அருகே கொண்டு வீசியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட Gareecaவுக்கு 23 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.