பிரித்தானியாவில் திடீரென அறுந்து விழுந்த ராட்டினம்….. குழந்தைகளுக்கு நேர்ந்த கதி

0

பிரித்தானியாவில் வடக்கு அயர்லாந்தில், அன்ட்ரிமில் கவுன்டியில் உள்ள கேரிக்ஃபெர்கஸ் (Carrickfergus) துறைமுகத்தில் உள்ள Planet Fun பீலியாட்டு பூங்காவில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.

சுழன்றுக்கொண்டே 40 அடி உயரம் வரை மேலே சென்று வரும் ‘Top of the World’ எனும் ஒருவகை ராட்டினத்தில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அந்த ராட்டினம் கோளாராகி தரையில் விழுந்தது.

அதில் விளையாடிக்கொண்டு இருந்தவர்களில், 4 குழந்தைகள் உட்பட 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

8 பேருக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறி சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களை Royal Belfast மருத்துவமனை மற்றும் Antrim Area மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து, Carrickfergus Castle தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் விபத்துக்கு காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here