பிரித்தானியாவில் திகில்பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0

பிரித்தானியாவில் உள்ள நெடுஞ்சாலையில், நள்ளிரவில் தனியாக சென்ற பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திகில்பட பாணியில் திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷைர் கவுன்டியில், தாட்சம் பகுதியில் உள்ள A4 நெடுஞ்சாலையில் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

தேம்ஸ் வேலி பொலிஸார் இது குறித்து கூறியதாவது, பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவர், திங்கட்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், அந்த சாலையில் Cox’s Lane சந்திப்பை கடந்துள்ளார்.

அப்போது, அந்த வழியில் சாலையில் வாகனங்களை ஓரம்கட்டி நிறுத்தக்கூடிய பகுதியில், குழந்தையை அமரவைத்து அழைத்துச்செல்லும் இருக்கை கீழே கிடப்பதை அப்பெண் பார்த்துள்ளார்.

அங்கே விபத்து ஏதும் நடந்துள்ளதா, குழந்தைக்கு ஏதேனும் ஆனதா அந்த அவர் தனது காரை நிறுத்திவிட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு குழந்தை ஏதும் இல்லை.

அப்போது, திடீரென அப்பெண்ணை யாரோ ஒருவர் பின்னாலிருந்து தாக்கி, அவரை அங்கேயே பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அப்பெண் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் சந்தேகநபரை வலைவீசி தேடிவருகின்றனர். அவர் யார் என்பது பாதிக்கப்பட்ட பெண்ணாலும் அடையாளம் கூற முடியவில்லை, மேலும் அப்பெண்ணின் காரில் இருக்கும் கமெராவிலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த சம்பவம் இன்னும் புரியாத மர்மமாகவே உள்ளது. மேலும், அங்கிருந்த அந்த குழந்தைக்கான இருக்கை திட்டமிட்டு அங்கே வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் ரோந்து பொலிஸாரை அதிகப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும் “பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சாலையில் அல்லது சாலையோரத்தில் எதையும் சந்தேகிக்கும் வகையில் பார்த்தால், துல்லியமான இருப்பிடத்தைக் குறித்து வைத்து, தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸாரை அழைக்கவும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here