பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி…..

0

உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வோருக்கு, குறிப்பாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மூளையில் இரத்தக்கட்டிகள் உருவாதல், இதய அழற்சி முதலான பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பைசர் நிறுவன தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் Georgia-Rose Segal (34) என்ற பெண், ஜூன் மாதம் 29ஆம் திகதி பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தலை சுற்றல் ஏற்படுவதுடன் அவரால் சரியாக நடக்க முடியாமல் போயுள்ளது.

தனது வீட்டில் நடக்க அவர் தடுமாறுவதையும், அவரது கால்கள் வலிப்பு வந்ததுபோல் துடிப்பதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விடயம் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 100,000 லைக்குகளைப் பெற்றுள்ள அது, மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தடுப்பூசிக்கு எதிரான மன நிலை கொண்டவர்கள், பார்த்தீர்களா இதனால்தான் நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கொந்தளிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here