பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்படும்.

ஆனால் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு கொண்டவர்கள், இரு டோஸ் தடுப்பூசி எடுத்திருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 10 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் திட்டம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அடுத்த வாரம் அறிக்கை வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

அடுத்த வாரம் வெளியிடப்படும் அறிக்கையில், மாஸ்க் அணிவதில் விலக்கு ஏற்படுத்துவது தொடர்பிலும், சமூக இடைவெளியின் தேவை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஜூன் 21ம் திகதிக்கு பின்னரும், இரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னரும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிக்கப்படுமாயின் பிரித்தானிய மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

ஆனால் அமெரிக்காவில், இரு டோஸ் எடுத்துக் கொண்ட பின்னரும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here