பிரித்தானியாவில் தடுப்பூசி பெற்ற 7 பேர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

0

பிரித்தானியாவில் கடந்த மார்ச் 24-ஆம் திகதி வரை அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற சுமார் 18 மில்லியன் மக்களில் 30 பேருக்கு இரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது.

அதில் இதுவரை 7 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக்க பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு குழு MHRA அறிவித்துள்ளது.

அவை வெறும் தற்செயலா அல்லது தடுப்பூசியின் உண்மையான பக்க விளைவுதானா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட 30 பேரில் 22 பேர் Cerebral Venous Sinus Thrombosis (CVST) எனும் மூளையில் இரத்தம் உறையும் அறிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிக மிக குறைந்த பாதிப்பு என்றாலும், மக்களுக்கும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை அங்கீகரித்த மற்ற நாடுகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசியால் ஆபத்து இருக்கிறது என ஒருபுறம் நிரூபிக்கப்படாமல் கூறப்பட்டாலும், அதைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் மிக மிக அதிகமாக இருப்பதால் அஸ்ட்ராஜெனேகாவை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதற்கிடையில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மிகவும் அரிதான இரத்தக் கட்டிகளை உண்டாக்குகிறதா என்று விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here