பிரித்தானியாவில் தடுப்பூசியைப் பயன்படுத்திய பின் அரிய நோய் பாதிப்பு கண்டுப்பிடிப்பு

0

பிரித்தானியாவில் அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்திய பின்னர், 30 அரிய இரத்த உறைவு பிரச்சினை அடையாளம் கண்டுள்ளது.

பிரித்தானிய மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வியாழக்கிழமை இதனை தெரிவித்தனர்.

BioNTech SE மற்றும் Pfizer Inc தயாரித்த தடுப்பூசியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து உறைதல் நிகழ்வுகள் குறித்து இதுபோன்ற அறிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்று Medicines and Healthcare products Regulatory Agency (MHRA) தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனாவை தடுப்பதில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதாக இன்னும் நம்புகிறோம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தடுப்பூசிகளை போட தொடங்கியுள்ளன.

அரிதான மற்றும் சில நேரங்களில் கடுமையான இரத்த உறைவு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுவதால், சில நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துவருகின்றன.

மார்ச் 18 அன்று, MHRA வெளியிட்ட அறிக்கையின்படி 11 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதில், 5 பேர் அரிய மூளை இரத்த உறைவு பிரச்சினைக்கு ஆளானதாகக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

22 பேர் பெருமூளை சிரை சைனஸ் த்ரோம்போசிஸின் எனும் மிகவும் அரிதான மூளை உறைதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 8 பேர் குறைந்த இரத்த பிளேட்லெட்டுகளுடன் தொடர்புடைய பிற உறைதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here