பிரித்தானியாவில் டெல்டாக்ரொன் கலப்பின வைரஸ்

0

பிரித்தானியாவில், டெல்டாக்ரொன் என்ற கலப்பின கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் குண இயல்புகளை வெளிப்படுத்தும் இந்தக் கலப்பின திரிபுக்கு டெல்டாக்ரொன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

டெல்டாக்ரொன் வைரஸ் திரிபு கடந்த ஆண்டு சைபிரஸில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.

25 பேருக்கு இந்தத் தொற்று காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தப் புதிய கலப்பின வைரஸ் திரிபு, பிரித்தானியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அது குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்டாக்ரொன் வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தோ அல்லது அதன் அறிகுறிகள் தொடர்பிலோ அந்த நிறுவனம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here