பிரித்தானியாவில் சொக்லேட் கடையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

0

பிரித்தானியாவில் ஸ்கந்தோர்ப் பகுதியில் அமைந்துள்ள சொக்லேட் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த மொத்த சொக்லேட்டும் உருகி வழிந்துள்ளது.

அங்கு சுமார் 1,000 பவுண்டுகள் மதிப்பிலான சொக்லேட்டுகள் மொத்தமாக உருகி சேதமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக குளிர்சாதனங்கள் இயங்காத காரணத்தால் இவ்வாறு உருகியுள்ளது.

இதன் போது சொக்லேட்டுகள் முழுமையாக சேதமாகியது என தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, தற்போது கடையில் இருந்த சொக்லேட்டும் சேதமாகவே, கடை உரிமையாளரின் மகள் நடந்ததை கூறி இணையத்தில் உதவி கோரியுள்ளார்.

இதனையடுத்து பலரும் தங்களால் இயன்ற உதவியை அளிக்க முன்வந்துள்ளனர்.

தற்போது 450 பவுண்டுகள் வரையில் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகம் தெரியாத அறிமுகமற்றவர்களும் தங்கள் நிலை அறிந்து உதவ முன்வந்துள்ளது மிகப்பெரிய ஆறுதல் என குறிப்பிட்டுள்ள அந்த குடும்பம், நன்றி கூற வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆண்டுகளாக குறித்த சொக்லேட் கடையை நடத்தி வந்துள்ளனர் ஸ்டீபன் மற்றும் லிண்டா எல்லிஸ் தம்பதி.

இந்த ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாகவே இப்படியாக இரு நெருக்கடி ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காப்பீடு பிரீமியம் தொகை அதிகரிப்பு காரணமாக, இழப்பீடு கேட்டு முறையிடவும் இயலாமல் போயுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here