பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு தடை செய்யப்படும் பொருள்..!

0

பிரித்தானியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஹாலோஜென் பல்புகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஹாலோஜென் லைட் பல்புகளுக்கு பதிலாக ஃப்ளோரசன்ட் லைட்டுகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஆண்டுக்கு 1.26 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும், மேலும் இது மின்சாரத்தை சேமிக்கவும், நுகர்வோருக்கு ஆண்டுக்கு 75 டொலர் சேமிக்க உதவும் என கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய அளவிலான விதிகளின் கீழ் 2018-ஆம் ஆண்டு முதல், அதிக ஆற்ற பயன்படுத்தும் ஹாலோஜென் பல்புகளை விற்பனை செய்வதை படிப்படியாக குறைத்து வந்தது.

ஆனால், இனி 2021 செப்டம்பர் முதல் மீதமுள்ள ஹாலோஜென் பல்புகளையம் விற்க முடியாது.

இதன் மூலம் நாடு முழுவதும் குறைந்த மின் சக்தியை மட்டுமே எடுக்கும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்கப்படும் மூன்றில் இரண்டு பங்கு விளக்குகள் எல்.ஈ.டி விளக்குகளாக உள்ளது.

மேலும் 2030-க்குள் விற்கப்படும் அனைத்து விளக்குகளில் 85% எல்.ஈ.டிக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here