பிரித்தானியாவில் சுகாதார செயலாளர் Matt Hancock பதவி விலகல்

0

பிரித்தானியாவில் சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் (Matt Hancock) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளி குறித்த அறிவுறுத்தல் உலக நாடுகள் அனைத்திலும் பேணப்படுகின்றன.

எனினும் அந்த அறிவுறுத்தலை மீறி சக பெண் பணியாளர் ஒருவருக்கு அவர் முத்தமிடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தாம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விடயத்தை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக சுகாதார செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக, பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது பதவி விலகலுக்கு போரிஸ் ஜொன்சன் கவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய சுகாதார செயலருடன் நெருக்கமாக இருந்தபோது சிக்கிய பெண் தலைமறைவு -  லங்காசிறி நியூஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here