பிரித்தானியாவில் சிக்கன் சாப்பிட்டு கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

பிரித்தானியாவின் Cheshire கவுண்டியை சேர்ந்தவர் Katie Moss 21 வயது

இவர் சில தினங்களுக்கு முன்னர் மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து பன்றி இறைச்சி, சிக்கன், சிப்ஸ் மற்றும் பர்கரை மதிய உணவாக ஆர்டர் செய்தார்.

இதையடுத்து கவரால் சுற்றப்பட்டு அந்த உணவுகள் Katieக்கு வந்து சேர்ந்தது.

நல்ல அகோர பசியில் இருந்த அவர் அதனை சாப்பிட தொடங்கினார்.

4ல் 3 பங்கு உணவை சாப்பிட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஒரு உணவை கடிக்க சிரமமாக இருந்தது.

அது கீரையாக இருக்கும் என நினைத்து பார்த்த Katieக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் பெரிய சிலந்தி பூச்சி உணவில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அது போன்ற சிலந்தியை அப்பகுதியில் கண்டதே இல்லை என்கிறார் Katie.

பின்னர் அந்தப் பெண் மிகவும் வெறுப்படைந்து, பணத்தைத் திரும்ப பெறுவதற்காக மெக்டொனால்டு கடையைத் தொடர்புகொண்டார்.

தற்போது Katie உணவுக்காக கொடுத்த பணம் அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டது.

மேலும் சிலந்தி உணவு கவரில் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் தனக்கு மாற்று உணவு மட்டும் போதாது, இழப்பீடு தொகை வேண்டும் என Katie கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here