பிரித்தானியாவில் சர்வதேச பயண விதிகளில் தளர்வு

0

பிரித்தானியாவில் சர்வதேச பயண விதிகளில் தளர்வு ஏற்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரித்தானியா வந்த பின்னர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவை இல்லை.

மேலும் புறப்படும் முன் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனைகளும் முன்னெடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக, இரண்டு நாட்களுக்குள் flow test முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரை மணித்தியாலத்தில் முடிவுகள் தெரியவரும் என்பதுடன் PCR சோதனைக்கு செலவிடும் தொகையை விடவும் 60 பவுண்டுகள் குறைவாக செலவிட்டால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நியைில் flow test-ல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக PCR சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும்.

10 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் கட்டாயம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தளர்வுகள் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 4 மணியில் இருந்து அமுலுக்கு வர உள்ளது.

இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 194,747 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பிரித்தானியாவில் இரண்டாவது பெரிய உச்சம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here