பிரித்தானியாவில் கோர விபத்து…! பெற்ற குழந்தைகளை கத்தியால் குத்திய தாய்

0

வட அயர்லாந்தின் தலைநகரமான Belfastஇல் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிசார் வந்து பார்க்கும்போது, அந்த வீட்டுக்குள், பிறந்து ஏழு வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றும் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெளிளத்தில் கிடப்பதை கண்டுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளை கத்தியால் குத்தியது அந்த குழந்தைகளின் 29 வயதான தாய் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அந்த பெண்ணின் பெயர் Raluca Tagani.

Ralucaவால் கத்தியால் குத்தப்பட்ட பெண் குழந்தை ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் நிலைமை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் தந்தையான Liam மூன்று ஆண்டுகளுக்கு முன் ரொமேனியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு Ralucaவை சந்தித்திருக்கிறார்.

பிறகு இருவரும் திருமணம் செய்து Liamஉடன் வாழ்வதற்காக Raluca வட அயர்லாந்துக்கு வந்திருக்கிறார்.

குழந்தைகள் கொல்லப்பட்ட விடயம் Belfastஇல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், Raluca கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here