பிரித்தானியாவில் கோர விபத்து…! மொபைலில் படம் பிடித்த சாரதிகள் மீது வழக்கு

0

பிரித்தானியாவில் M6 பிரதான சாலையில் மூன்று லொறிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஜூலை 8 ஆம் திகதி நடந்த இந்த கோர விபத்தால் M6 பிரதான சாலையின் தென்பகுதி 17 மணி நேரம் மூடப்பட்டது.

இதில் 48 சாரதிகள் குறித்த சம்பவத்தை படம் எடுக்கும் நோக்கில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்துக் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடையாளம் காணப்பட்டுள்ள சாரதிகளை பொலிசார் எச்சரித்துள்ளனர்.

இந்த கோர விபத்தை மொபைலில் பதிவு செய்த சாரதிகள் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here