
பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளும் 10 நாட்களில் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனவரி இறுதிக்குள் இந்த நடவடிக்கைகள் நீக்கப்பட்டால், பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் உட்புற நிகழ்வுகளில் கட்டாய முகக் கவசம் அணிவது முடிவுக்கு வரும்.
வீட்டிலிருந்து பணிபுரியும் ஆலோசனையும் ஜனவரி 26ஆம் திகதியுடன் நிறுத்தப்படும்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இம்மாத இறுதியில் கட்டுப்பாடுகள் தேவைப்படாது என்று சனிக்கிழமை பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் உறுதியாக கூறியுள்ளார்.
இதனிடையே பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,713 பாதிப்புகள் பாதிவாகியுள்ளன.
பிரித்தானியாவில் கடந்த ஒரு மாதத்தில் பதிவான மிகக் குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.