பிரித்தானியாவில் கொடூர சம்பவம்…! தனது தங்கையை கொலை செய்த இளைஞன்…

0

பிரித்தானியாவில் தனது 15 வயது தங்கையை தானே கொலை செய்ததாக 19 வயது இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஜூலை 31 சனிக்கிழமையன்று, வேல்ஸின் அபெர்கெலேவுக்கு அருகிலுள்ள Towyn-ல் உள்ள டை மாவ்ர் விடுமுறை பூங்காவில் (Ty Mawr Holiday Park ) ஒரு இளைஞர் மற்றும் சிறுமிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பொலிஸுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்த்தபோது, அமாண்டா எனும் 15 வயது சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

சிறுமியை அவளது சகோதரனே கொலை செய்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, Greater Manchester-ல் உள்ள Ashton-under-Lyne பகுதியைச் சேர்த்த சிறுமியின் சகோதரனான 19 வயது மேத்தியூ செல்பியை (Matthew Selby) பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெப்ரவரி 7 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிம்னற விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளியான மேத்தியூ, தானே தனது தங்கையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால், மேத்யூ தரப்பு வக்கீல், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அவரை மீண்டும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கெண்ட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here