பிரித்தானியாவில் கறுப்பினத்தவரை தாக்கும் பொலிஸ் அதிகாரியால் பரபரப்பு

0

பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், குடியிருப்பிற்கு பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் பொலிசார் ஒருவர், 41 வயது மதிக்கத்தக்க கருப்பினத்தவர் ஒருவரை தாக்கியுள்ளார்.

அப்போது அங்கிருக்கும் பெண் ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட 24 மணித்தியாலத்திற்குள் பல ஆயிரம் கணக்கான மக்கள் பார்த்தால், பொலிசாரை பலரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

இதையடுத்து, Gwent பொலிசின் தலைமை கண்காணிப்பாளர் Tom Harding இது குறித்து தெரிவிக்கையில்

கடந்த 9-ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை Newport பகுதியில், 41 வயது மதிக்கத்தக்க நபர் வாகனம் ஓட்டுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், அவர் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவர் அந்த வாகனத்திற்கு ஊரிய காப்பீடு இல்லை.

இதைத் தொடர்ந்து அவர் அவசரகால ஊழியர் ஒருவரையும் தாக்கியதால், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய முற்பட்ட போது, அவர் கடமையை செய்வதில் தடுத்ததால், இந்த சம்பவம் நடந்ததாகவும், அதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here