பிரித்தானியாவில் ரிவியூ வீதிக்கும் ஹீதர் வீதிக்கும் இடையில், NW2 சந்திக்கு அருகே ஒரு பெரிய மோதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற காவற்துறையினர், கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை மீட்டுள்ளனர்.
அவசர சிகிச்சை வழங்கிய போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மூவரை இன்று காலை கைது செய்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளனர்.