பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு – இலங்கையில் 9 இடங்களில் பதிவு

0

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு (Alpha) இலங்கையின் 09 இடங்களில்பதிவாகியுள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாப்பிட்டிய, வாரியபொல, ஹபரதுவா, திசமஹாராம, கராபிட்டி மற்றும் ராகம ஆகிய இடங்களில் இந்த புதிய மாறுபாடுகள் பதிவாகியுள்ளன.

இதேநேரம், பி 1.617.2, வைரஸின் இந்திய மாறுபாடு (டெல்டா) வஸ்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

மேலும் B.1.411 புதிய மாறுபாடு திஸ்ஸமஹாராமவிலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது குழு நடத்திய ஆய்வில் இந்த விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here