பிரித்தானியாவில் கடும் எரிபொருள் நெருக்கடியில் மக்கள்

0

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிற்பதை காணலாம்.

எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆபரேஷன் எஸ்கலின் என்ற அவசரத் திட்டத்தை தொடங்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில், ஆபரேஷன் எஸ்கலின் என்னும் அவசரத் திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு, எரிபொருள் சப்ளை செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் ஈடுபடுத்தப்படலாம்.

போரிஸ் ஜான்சன் ஆபரேஷன் எஸ்கலின் செயல்படுத்துவது குறித்து முடிவு செய்ய அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல பெட்ரோல் நிலையங்களில், இருப்பு தீர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவல் (Corona Virus) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தால், லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய சுமார் 25,000 கனரக வாகன ஓட்டுநர்கள் நாடு திரும்பவில்லை. பிரெக்ஸிட் மற்றும் கொரோனா பாதிப்பின் காரணமாக சுமார் ஒரு லட்சம் லாரி ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக இங்கிலாந்து கனரக வாகனங்கள் துறை கணக்கிட்டுள்ளது.

முன்னதாக, எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பது தொடர்பாக இங்கிலாந்தின் வர்த்தக செயலாளர் குவாசி குவார்டெங், போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினர்.

பொதுமக்கள் பீதி காரணமாக அதிக எரிபொருள் வாங்க தொடங்கியது தான் , எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என்று இங்கிலாந்து அமைச்சர்கள் கூறுன்றனர். எரிபொருள் நெருக்கடி பற்றிய ஊடக அறிக்கைகள் காரணமாக மக்கள் பீதியில் எரிபொருளை வாங்க அலைமோதினர். எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here