பிரித்தானியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை

0

இங்கிலாந்தில் ஒரு குடியிருப்பில் நான்கு பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள தேர்ப்யஷிரே என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, Terri Harris என்ற 35 வயதுடைய பெண், அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையின் தோழி என்று நால்வர் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இது தொடர்பில் ஒரு நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் நடந்து நான்கு மணி நேரங்கள் கழித்து வீட்டிற்கு வந்த குழந்தைகளின் தந்தை, Jason Bennett, கதறி துடித்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் இணையதளத்தில் இது குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், என் மனம் சுக்குநூறாக நொறுங்கி போனது. என் குழந்தைகளை அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றாமல் விட்டு விட்டேனே, தற்போது என்னிடமிருந்து குழந்தைகள் பறிக்கப்பட்டு விட்டார்களே என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here