பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்….. அரசு ஆலோசகர்களின் எச்சரிக்கை

0

கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து உருமாற்றி வருகின்றது.

உருமாற்றமடைந்த புதிய மாறுபாடானது தீவிர உயிர்க்கொல்லியாக மாறியுள்ளது என பிரித்தானியா அரசின் ஆலோசகர்கள் குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

புதிய கொரோனா மாறுபாடானது பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றில் ஒருவர் இறக்க நேரிடும் என்றே அரசு ஆலோசகர்கள் குழுவினர் எச்சரிக்கின்றனர்.

மேலும் தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகளால் போதிய பலனும் இருக்காது என கூறுகின்றனர்.

பூஸ்டர் டோஸ் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது

.பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடும், இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடும் ஒன்றிணைந்து புதிய மாறுபாடாக உருவாகும் நிலை ஏற்பட்டுமாயின்,

அது மிக ஆபத்தான மாறுபாடாக மாறும் என்றே கூறுகின்றனர்.

தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுவரையான தடுப்பூசிகள் முழுமையான பாதுகாப்பை அளிக்காத நிலையில், புதிய மாறுபாடானது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பது தடுக்க முடியாத ஒன்று என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here