பிரித்தானியாவில் ஊரடங்கு தளர்வு தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

0

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருமாயின் எதிர்வரும் 21 ஆம் திகதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் தளர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது.

ஊரடங்கு கட்டுப்பாடு அடுத்த நான்கு வாரங்கள், அதாவது வரும் ஜுலை 19 ஆம் திகதி வரை நீடிக்கப்படலாம் என்று பிரதமர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர், வரும் ஜுலை 19 ஆம் திகதிக்குள் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என கூறியுள்ளார்.

இதற்காக புதிய இலக்கு நிர்ணையிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கான தரவுகளை அடிப்படையில் கொண்டு, இந்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது சிவப்பு பட்டியலில் இல்லாதவர்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here