பிரித்தானியாவில் உதவ சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

0

பிரித்தானியாவில் 72 வயதாகும் மூதாட்டி ஒருவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை உடனடியாக ஏழை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை வாங்க உதவித் தொகையாக கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் Kath Scott எனும் 72 வயதாகும் பெண்மணி, இந்த கோவிட் காலகட்டத்தில் NHS ஊழியர்களுக்காக இலவசமாக மருத்துவ பாதுகாப்பு உடைகளை தயாரித்து கொடுத்துவந்துள்ளார்.

அவருக்கு உதவியாக அவருடைய துணைவர் ஆலன் இந்த உதவிகளை தொடர்ந்து செய்து வந்தனர்.

Kath Scott கடந்த 53 வருடங்களாக டெர்பிஷைரில் உள்ள Ironville பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர்கள் வசித்துவந்த வீட்டின் முகவரிக்கு ‘People’s Postcode Lottery’-யில் இருந்து 140,000 பவுண்டுகள் பரிசு தொகை விழுந்துள்ளது.

இதனால் பெருமகிழ்ச்சியில் திளைத்த இருவரும், உடனடியாக இந்த பணத்தை ஏழை நோயாளிகளுக்கே தானம் செய்ய முடிவெடுத்தனர்.

குறிப்பிட்ட ஒரு பங்கை தங்களது பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, மற்ற தொகையை, இதய நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் Defibrillator எனும் மருத்துவ உபகரணத்தை வாங்க உதவித்தொகையாக வழங்க உறுதியளித்துள்ளனர்.

மேலும், அந்த மருத்துவ உபகரணத்தை அவர்கள் வசிக்கும் அதே ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பொறுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here