பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…….3 இளைஞர்கள் கைது….

0

இங்கிலாந்தில் கிரேட்டர் மான்செஸ்டரில், Bury பகுதியில் கிழக்கு தெருவில், வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு 31 வயது பெண்ணை 3 இளைஞர்களை உயிருடன் கொளுத்தி கொலை செய்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

ஆனால், மருத்துவர்கள் போராடிய பிறகும் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது ஒரு கொலை சம்பவம் என தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக 34, 26 மற்றும் 24 வயதுடைய மூன்று இளைஞர்ளை பொலிஸார் கைது செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக வேறு யாருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை என கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here