பிரித்தானியாவில் இளம்பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை….

0

பிரித்தானியாவில் கன்னித்தன்மை சோதனைகள் மற்றும் ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகள் (hymen restoration procedures) அதிகரித்து வருகின்றது.

இந்த நடைமுறைகளைக் கொண்ட சில பெண்கள் கட்டாய திருமணத்தின் காரணமாக இவ்வாறு நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள், சொந்த குடும்பத்தில் தங்களை கன்னித்தன்மை சோதனை செய்யுமாறு நிர்பந்திப்பாதாக, இளம் பெண்கள் முறைப்பாடு வைத்துள்ளனர்.

கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தனது தந்தையால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர், தெரிவிக்கையில்,

அதிக ஊடுருவும் பரிசோதனையை செய்ய வேண்டாம் என்று மருத்துவரிடம் கெஞ்சியதாகவும், அது தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும், சிகிச்சை என்ற பெயரில் மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்டதாகவும் மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் நல ஆர்வலர்கள், இந்த சோதனைகள் மற்றும் பெண்ணின் கன்னித்தன்மையை மீட்டெடுப்பதாகக் கூறும் ஒரு அறுவை சிகிச்சை முறை (hymenoplasty) இனி சட்டவிரோதமானதாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here