பிரித்தானியாவில் இரு இளைஞர்களின் கொடூரச் செயல்…!

0

பிரித்தானியாவில் இரண்டு இளைஞர்கள் பட்டா கத்தியுடன் சாலையில் மாறி மாறி வெட்டிக்கொண்ட பயங்கரமான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில், இங்கிலாந்தில் Lancashire மாநிலத்தில் உள்ள Morecambe நகரத்தில் Bartholomew சாலையில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Morecambe நகரத்தைச் சேர்ந்த 31 மற்றும் 29 வயதுள்ள இரண்டு இளைஞர்களும், குடும்பங்கள் நிரைந்த சாலையில் 2 முதல் 3 அடி நீலம் கொண்ட பட்டா கத்திகளைக் கொண்டு சண்டையிட்டுள்ளனர்.

இருவருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரையும் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களை சாட்சி அளிக்க பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து Morecambe பகுதியில் ரோந்து பொலிசார் அதிகரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here