பிரித்தானியாவில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல்!

0

பிரித்தானிய நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே, லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார்.

இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லீசெஸ்டர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 15 பேரை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here