பிரித்தானியாவில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டம்…!

0

பிரித்தானியாவில் இன்று முதல் புதிதாக ஒரு தாக்குதல் ஆயுதச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய தாக்குதல் ஆயுதச் சட்டம் (Offensive Weapons Act) ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த கடுமையான புதிய சட்டங்களின் கீழ், இனி வீடுகளில் ஜாம்பீ கத்திகள், நக்கில்டஸ்டர்கள், ஷுரிகென் போன்ற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி {rapid-firing rifles} மற்றும் ‘சூறாவளி கத்திகள்’ உள்ளிட்ட சில ஆயுதங்களை பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனியாக வைத்திருப்பது சட்டவிரோதமானது.

குற்றவியல் நீதிச் சட்டம் 1988-ன் (Criminal Justice Act 1988) கீழ் பகிரங்கமாக தடை செய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களும், இப்போது தனிப்பட்ட முறையில் தடை செய்யப்படும்.

அதாவது மக்கள் இனி அவற்றை வீட்டில் வைத்திருக்க அனுமதி இல்லை

தடைக்கு உட்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருக்கும் எவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

மற்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here