பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்…

0

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்த தவறும் இல்லாத விவாகரத்துச் சட்டம் (no-fault divorce ) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நிலையில், விவாகரத்துக்கான விண்ணப்பங்கள் நீதிமன்றங்களில் அதிகரிக்கும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரித்தானியாவில் சுமார் 50 ஆண்டுகளுக்குப்பின் விவாகரத்து சட்டங்களில் மிகப்பெரிய சீர்திருத்தம் என்பதால் நீதிமன்றங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.

வியாழன் அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய விவாகரத்து புள்ளிவிவரங்களின் படி, 2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் விவாகரத்து மனுக்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 26% குறைந்துள்ளதை காட்டுகிறது.

இந்த புதிய விவாகரத்துச் சட்டத்தை செயல்படுத்த தேவையான புதிய தொழில்நுட்பத்துடன் வழக்குகளின் ஆரம்ப எழுச்சி மேலும் அதிகரிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.

இந்த நீண்ட கால சீர்திருத்தம் நீதிமன்றங்களின் சுமையை குறைக்கும் என கூறப்படும் அதேவேளை விவாகரத்து கோரும் ஜோடிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.

மேலும், இந்த புதிய சட்டம் நிதி தீர்வு செயல்முறையை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விவாகரத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை

அதேநேரம் முதல் முறையாக விவாகரத்துக்கான புதிய குறைந்தபட்ச ஒட்டுமொத்த காலக்கெடு ஆறு மாதங்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here