பிரித்தானியாவில் அதிவேகமெடுக்கும் இந்தியாவில் உருமாறிய கொரோனா! அச்சத்தில் மக்கள்

0

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் பகுதியில் இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனாவின் பரவல் வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என நம்புகின்றனர்.

பெட்ஃபோர்ட் பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கிட்டத்தட்ட முக்கால்வாசி பாதிப்புகளில் இந்தியாவில் உருமாற்றம் கண்ட தொற்று என தெரியவந்துள்ளது.

குறித்த தொற்றானது 11 முதல் 22 வயதுக்கு உட்ப்பட்டவர்களில் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த வயது வரம்பில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தற்போதைய விதிகளின் கீழ் தடுப்பூசி பெற மாட்டார்கள்.

ஆனால் உள்ளூர் ஊரடங்குகளும் உரிய பலன் தராது என்றே நகர நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு முழு ஆண்டு கால அவகாசம் கிடைத்தும் போரிஸ் அரசாங்கம் மெத்தனமாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பெட்ஃபோர்ட் அகாடமிக்குச் செல்லும் ஆசிரியர்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஆகியவர்களுக்கு மிஞ்சும் தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகம் அங்குள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here