பிரித்தானியாவில் monkeypox தொற்று வேகமெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒரே நாளில் 36 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரித்தானியாவில் மொத்தம் monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 என அதிகரித்துள்ளது.
லண்டன் மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்று monkeypox தொற்றால் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், monkeypox தொற்று காரணமாக இதுவரை எவரும் இறக்கவில்லை என மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இது ஓரினச்சேர்க்கை மற்றும் இருபாலின ஈர்ப்பு ஆண்களை அதிகமாக பாதிப்பதாக சுகாதார நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானிய மக்களில் ஆபத்து சதவீதம் குறைவாகவே உள்ளது என நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் தாமாகவே முன்வந்து சோதனை செய்து கொள்வதும் பாராட்டுக்குரிய விடயம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
monkeypox தொற்றானது பொதுவாக மேற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது.
மேலும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவாது.
அதனால்தான் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தொற்றானது சுகாதார நிபுணர்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் பதினாறு நாடுகளில் monkeypox தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.